இலங்கை கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்து கையெழுத்து வேட்டை!

இலங்கையில் இடம்பெற்று வரும் உலகக்  கிண்ண கிரிக்கெட் தொடரை முன்னிட்டு விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் பல்வேறு நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அண்மையில் உலகக் கிண்ணம்  நாடெங்கிலும் கொண்டு சென்றதைப் போல் இலங்கை அணி வீரர்களுக்கு இம்முறை உலக  கிண்ணத்தை வெல்ல வேண்டி வாழ்த்து தெரிவித்து கிழக்கு மாகாணத்திலும் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இதே வேலை,

மட்டக்களப்பு மாவட்டத்தில நிலவும் சீரற்ற கால நிலைக்கு மத்தியிலும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து களுவாஞ்சிகுடி போக்குவரத்து நிலையத்திற்கு முன்பாகவும் மட்டு நகரில் கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு வளாகத்திற்கு முன்பாகவும் பொது மக்களினால் கையெழுத்து இடம் நிகழ்வு இடம்பெற்றது .

இதன் போதுமக்கள் மாணவர்கள் விளையாட்டு வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இலங்கை அணிக்கு வாழ்த்து தெரிவித்து தமது கையொப்பங்களை பாரிய துடுப்பு மட்டையில் ஈட்டனர்.

இதன் போது விளையாட்டு துறை அமைச்சின் உயர் அதிகாரிகள் மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட்  கட்டுப்பாட்டு சபை பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *