களுவாஞ்சிகுடி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற 19 வயது இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
களுதாவளை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் விஜயகாந்த் என்பவர் நேற்று மாலை சிறிய படகில் தனியாக கடலுக்குச் சென்ற நிலையில், இன்று காலை வரை வீடு திரும்பவில்லை. பின்னர் மீனவர்கள் மேற்கொண்ட தேடுதலில், அவர் சென்ற படகு கண்டுபிடிக்கப்பட்டாலும் இளைஞர் காணப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

