வாகனம் வாங்க கடன் பெறுவது மேலும் சவால்!

தங்க அடகு மற்றும் வாகனக் கடன்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – மத்திய வங்கியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

அதிகரித்து வரும் கடன் விரிவாக்கம் மற்றும் சந்தை ஏற்றத்தாழ்வுகளை கருத்தில் கொண்டு, இலங்கை மத்திய வங்கி தங்க அடகு கடன்களுக்கு 70% கடன்-பெறுமதி (LTV) உச்சவரம்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும், வாகனக் கடன்களுக்கான LTV வரம்புகள் 10% அளவுக்கு மேலும் இறுக்கப்பட்டுள்ளன. இதன்படி, வணிக வாகனங்களுக்கான கடன் வரம்பு 70% இலிருந்து 60% ஆகவும், கார், SUV, வேன் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட ஏனைய வாகனங்களுக்கான கடன் வரம்பு 50% இலிருந்து 40% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறைகள் இன்று (25) முதல் அமலுக்கு வந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *