வெலிமடையில் தோட்ட மக்களுக்கு 170 வீடுகள் கொண்ட மாதிரிக் கிராமம்!

‘டிட்வா’ இயற்கை அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மற்றும் அதிக அபாயகரமான வலயங்களில் வாழும் தோட்டத்துறை சார்ந்த 170 குடும்பங்களுக்காக, வெலிமடை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அபெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

170 வீடுகளைக் கொண்ட இப்பாரிய திட்டத்திற்காக அரசாங்கத்தினால் ரூ. 850 மில்லியன் (ரூ. 85 கோடி) நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

12.5 ஏக்கர் (5 ஹெக்டயர்) நிலப்பரப்பில் அமைக்கப்படும் இக்கிராமத்தில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 பேர்ச்சஸ் நில உரிமையுடன் ரூ. 50 இலட்சம் (ரூ. 5 மில்லியன்) நிதி ஒதுக்கீட்டில் வீடுகள்
கட்டப்படவுள்ளன.

இந்நிதி 3 கட்டங்களாக ரூ. 20 இலட்சம், ரூ. 15 இலட்சம், ரூ. 15 இலட்சம் என வழங்கப்படும்.

வெறுமனே வீடுகள் மட்டுமல்லாது, சமூக மண்டபம், விளையாட்டு மைதானம், உட்புற வீதிகள், குடிநீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய வசதிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

மக்களின் சமூக-பொருளாதார வாழ்க்கையை உயர்த்தும் வகையில் வீட்டுத் தோட்டச் செய்கை, சுயதொழில் வாய்ப்புகள் மற்றும் சமூக அமைப்புகளை உருவாக்கும் விசேட திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.

டிட்வா பேரிடருக்குப் பின் ஒரே இடத்தில் நிர்மாணிக்கப்படும் மிகப்பெரிய வீட்டுத் திட்டம் இதுவாகுமென தெரிவித்த, அமைச்சர் சமந்த வித்யாரத்ன, வெறுமனே வீடுகளை வழங்குவது மட்டும் எமது நோக்கமல்ல; அனைத்து அடிப்படை வசதிகளுடன் மக்கள் பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் வாழ்வதற்கான புதிய சமூகத்தைக் கட்டியெழுப்புவதே எமது இலக்காகுமென குறிப்பிட்டார்.பரகல தோட்டத்தில் புதிய மாதிரி கிராமத்திற்கான அடிக்கல் நேற்றையதினம் (06) நடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *