40 நாடுகளுக்கான இலவச விசா திட்டம் இன்று நடைமுறைக்கு வந்தது

இலங்கைக்கு குறுகிய கால சுற்றுலா வருகை தரும் 40 நாடுகளின் பிரஜைகளுக்கு 30 நாட்கள் செல்லுபடியாகும் இலவச சுற்றுலா விசா திட்டம் இன்று (25) முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுடைய பயணிகள் இலவச மின்னணு பயண அனுமதி (ETA) பெற்றுக்கொண்டு இலங்கைக்கு இருமுறை (Double Entry) நுழைய முடியும். இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 40 நாடுகள் இந்த வசதியில் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும், மாலைத்தீவு, சீஷெல்ஸ் மற்றும் சிங்கப்பூர் பிரஜைகளுக்கும் இலவச ETA வழங்கப்படுவதுடன், மாலைத்தீவு பிரஜைகளுக்கு 90 நாட்கள் சுற்றுலா விசா வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

30 நாட்களுக்கு மேல் தங்க விரும்புவோர், உரிய கட்டணத்தைச் செலுத்தி விசா நீடிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *