கந்தானை வெசாக் பெரஹரா: முக்கிய வீதிகளில் இன்று இரவு கட்டுப்பாடுகள் அறிவிப்பு

கந்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹபுகொட ஸ்ரீ வர்தனாராம விகாரையின் வருடாந்த மகா வெசாக் பெரஹரா இன்று (23) இடம்பெறவுள்ளதை முன்னிட்டு அப்பகுதியில் தற்காலிக போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இன்று இரவு 7.00 மணிக்கு விகாரையிலிருந்து ஆரம்பமாகும் இந்த ஊர்வலம், கந்தானை நகர மத்தியூடாக கம்பஹா – கந்தானை வீதி மற்றும் கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதிகளில் பயணித்து மீண்டும் விகாரையை சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, இரவு 7.00 மணி முதல் 10.30 மணி வரை பெரஹரா கம்பஹா – கந்தானை வீதியில் ராகம வெவ சந்தியிலிருந்து நீர்கொழும்பு வீதியின் கணேமுல்ல சந்தி வரையான பகுதியூடாக நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இரவு 10.30 மணி முதல் மறுநாள் அதிகாலை 1.00 மணி வரை கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் கந்தானை கணேமுல்ல சந்தியிலிருந்து ஆனியாகந்த வைத்தியசாலை சந்தி வரையான பாதையில் ஊர்வலம் நடைபெறவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *