ஆசிய அபிவிருத்தி வங்கியின் உணவுப்பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மீளடைவு அவசர உதவி கருத்திட்ட கலந்துரையால்!

 

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உணவுப்பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மீளடைவு அவசர உதவி கருத்திட்ட முன்னேற்ற மீளாய்வு கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட செயலக மண்டபத்தில் இன்று (03) இடம் பெற்றது.

மாவட்ட சமுர்த்தி பணிப்பாயர் எஸ். ராஜ்பாபு அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நிகழ்வில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டம் தொடர்பான மீளாய்வு இடம் பெற்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரனையில் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவில் தலா ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டு முன்னோடி வேலைத்திட்டமானது கடந்த வருடம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மண்முனை வடக்கு, மண்முனை தென் எருவில் பற்று, மண்முனை மேற்கு, ஏறாவூர் பற்று, கோரளைப்பற்று தெற்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட நபர்கள் இத் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு இத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தினுடாக தெரிவு செய்யப்பட்ட நபர்களை சமூக ஈடுபாடு, வாழ்வாதாரம், சமூகத்துடன் சேர்த்து வேலை செய்தல், சமூகத்துடன் இணைந்து செயற்படல் போன்ற செயற்திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டது

இந் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர், ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதி நிதிகள், மாவட்ட கருத்திட்ட முகாமையாளர், கருத்திட்ட முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் தெரிவு செய்யப்பட்ட பயனாளின் தேவைகளை பிறரின் உதவியின்றி சுயமாக நிறைவேற்றிக் கொள்வதற்கு தேவையான வழிகாட்டுதல் இத்திட்டத்தினுடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *