கிண்ணியாவில் கோர விபத்து: ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

கிண்ணியா கற்குழி சந்தியில் இன்று (01) மதியம் இடம்பெற்ற கோர விபத்தில், கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயத்தில் பணியாற்றி வந்த ஆசிரியர் முகமது மவுஜூத் (58) அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தார்.

​சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

இன்று பகல் 12 மணியளவில் கற்குழி சந்திக்கு அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஒரு நபருடன், ஆசிரியர் பேசிக்கொண்டிருந்தபோது, வான் எல பகுதியில் இருந்து அதிவேகமாக வந்த உளவு இயந்திரம் (Tractor) கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இன்னும் இரு வருடங்களில் ஓய்வு பெறவிருந்த நிலையில் இவரது மறைவு கிண்ணியா மக்கள் மத்தியிலும், கல்விச் சமூகத்திடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உளவு இயந்திர சாரதி பொலிஸில் சரணடைந்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *