தர்மபுரத்தில் வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணி ஆரம்பம்

2025ம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணியில் தபால் ஊழியர்கள் இன்று(17) முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்காளர் அட்டைகள் நேற்று(16) தேர்தல் திணைக்களத்தினால் உத்தியோகப்பூர்வமாக அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இன்று தபால் ஊழியர்கள் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்காளர் அட்டைகளை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *