போலி செய்திகளை கண்டறிவது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடல்

போலி செய்திகளை கண்டறிவது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடல் இன்று(31) மட்டக்களப்பில் இடம்பெற்றது.

 

குறித்த கலந்துரையாடலானது மட்டக்களப்பு கல்லடி கிறீன் ஹார்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.

 

குறித்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு தமக்கான தெளிவூட்டல்களைப் பெற்றுக்கொண்டனர்.

 

இதன்போது போலியான செய்திகள் மற்றும் வெளிநாட்டு தகவல் கையாளல் மற்றும் தலையீடு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்குப் பின்னர் உண்மையான மற்றும் சூழல் சார்ந்த தெளிவுபடுத்தல்களை உருவாக்கும் பயிற்சியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

 

சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஆய்வாளரும் சுதந்திர ஊடகவியலாளருமான சிஹார் அனிஸ் வளவாளராக கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *