வித்யா கொலை வழக்கு கைதி சிறையில் உயிரிழப்பு
புங்குடுதீவு வித்யா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி பூபாலசிங்கம் ஜெயகுமார், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இன்று (25) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
தீர்ப்பு வாசிப்பிற்காக நேற்று யாழ். சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

