வெசாக் தானசாலைகள் பதிவு தொடர்கிறது – உடனே விண்ணப்பிக்குமாறு கோரிக்கை

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் இதுவரை 2,388 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மே 29ஆம் திகதி வரை பதிவு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், ஏற்பாட்டாளர்கள் தாமதமின்றி பதிவு செய்யுமாறு அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த செயலாளர் சாமில் முத்துக்குட, MOH அலுவலகங்கள் மூலம் பதிவு செயல்முறைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தானசாலைகள் சுகாதாரமான முறையில் நடத்தப்படுவது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் இணையாக மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *