தமிழ் மொழித்தினப் போட்டிகளில் பட்டிருப்பு மாணவர்கள் பங்கேற்பு

பட்டிருப்பு கல்விவலயத்தின் வலயமட்ட அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டிகள் களுதாவளை தேசிய பாடசாலையில் வலயக்கல்வி பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றன.

முன்னாள் கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் சி. மனோகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

பாரம்பரிய கொட்டு இசை மற்றும் மாணவர்களின் கலாசார நிகழ்ச்சிகளுடன் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன. தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கிண்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *