திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனை அவசியம் – சுகாதாரத் துறை வலியுறுத்தல் .

சுகாதாரத் துறை தெரிவித்ததாவது, தலசீமியா மரபணுவைக் கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனை கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

அரச வைத்தியசாலைகளில் தலசீமியா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை, இரத்தமாற்றம் மற்றும் தேவையான மருந்துகள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே முழுமையான தீர்வாக கருதப்பட்டாலும், அது குறைந்த எண்ணிக்கையிலான நோயாளர்களுக்கே சாத்தியமாகும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இரு பெற்றோரிடமிருந்தும் தலசீமியா மரபணு குழந்தைக்கு கிடைக்கும் போது கடுமையான நோய் நிலை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், இது தொற்றுநோயல்ல என்றும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *