ஹுங்கம–கட்டகடுவ பகுதியில் சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது இன்று (20) காலை பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
வீதித் தடையை மீறி லொறி தப்பிச் செல்ல முயன்றதை தொடர்ந்து, அதை நிறுத்தும் நோக்கில் பொலிஸார் நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் லொறியில் இருந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

