சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் இலங்கையின் ஆரம்பப் போட்டியான அயர்லாந்துக்கெதிரான போட்டியின்போது கெண்டைக்கால் பின்தசை காயத்துக்குள்ளான வனிது ஹசரங்க தொடரிலிருந்து விலகியுள்ளார்.
எம்.ஆர்.ஐ ஸ்கான் கடந்த திங்கட்கிழமை (09) மேற்கொண்ட நிலையிலேயே இடது கெண்டைக்கால் பின்தசையில் மோசமான கிழிவொன்று வெளிப்பட்டது. இது முன்னைய கெண்டைக்கால் பின்தசை காயம் மீள ஏற்பட்டது போல இல்லாவிடினும் அதனுடன் தொடர்புடையதென நம்பப்படுகின்றது. காலில் பிரச்சினை உள்ளடங்கலாக சில ஆண்டுகளாக காயத்துடன் ஹசரங்க போராடுகின்றார்.
சுழற்பந்துவீச்சு சகலதுறைவீரரான டுஷான் ஹேமந்தவால் இலங்கைக் குழாமில் ஹசரங்க பிரதியிடப்படுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

