திண்மக்கழிவு அகற்றல் சேவையை வலுப்படுத்த சம்மாந்துறை பிரதேச சபையினால் புதிய உழவு இயந்திரம் கொள்வனவு!

சம்மாந்துறை பிரதேசத்தில் திண்மக்கழிவு அகற்றல் சேவையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சம்மாந்துறை பிரதேச சபையினால் புதிய உழவு இயந்திரம் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

பிரதேசத்தின் திண்மக்கழிவு முகாமைத்துவப் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கும், கழிவகற்றல் சேவையைத் தடையின்றி மேற்கொள்வதற்கும் இந்த உழவு இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்படும் கழிவகற்றல் நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துவதுடன், பொதுமக்களுக்கான சுகாதாரமான சூழலை உருவாக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *