எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்து!

அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என்பதை பாராளுமன்றத்திற்கு அறிவிக்க விரும்புகிறேன் என சபாநாயகர் பாராளுமன்றத்தில்  இன்று(06)  அறிவித்தார்.

இந்த சட்டமூலம் முழுமையாகவும் அல்லது அதன் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்புடன் முரண்படுவதில்லையென்பதால் அதனைப் பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையொன்றின் மூலம் நிறைவேற்றப்படலாம் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை இன்றைய கூட்ட நடவடிக்கைகள் பற்றிய அதிகார அறிக்கையில் பதிப்பிட வேண்டுமென நான் கட்டளையிடுகின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *