மூதூர் பகுதிகளில் கடும் மழையால் வீடுகள், பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன!

திருகோணமலை மாவட்டம் மற்றும் மூதூர் பிரதேசங்களில் பெய்த கடும் மழை காரணமாக பல குடியிருப்பு வீடுகளும் பாடசாலை வளாகங்களும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் அங்கு வசித்து வந்த மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், பல பாடசாலைகளின் வளாகங்களும் நீரில் மூழ்கியிருப்பதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள், அன்றாட பணிகள் மற்றும் உள்ளூர் போக்குவரத்து ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கடும் மழை மற்றும் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்குத் தேவையான அவசர நிவாரண உதவிகள், உணவு, குடிநீர் மற்றும் பாதுகாப்பான தங்குமிட வசதிகளை உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.

நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *