மட்டக்களப்பு மாவட்டம், வாகரை – பால்சேனை பகுதியில் மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் 26 வயதுடைய கணவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
இதில் பால்சேனை, கோவில் வீதியைச் சேர்ந்த 23 வயதுடைய காளிராசா மனோஜா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
மனைவியின் உறவினர் ஒருவருடனான திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது கணவர் இக்கொலையைச் செய்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து 119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவித்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

