சமுதாயம்சார் சீர்திருத்த திணைக்களத்தின் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம்!

சமுதாயம்சார் சீர்திருத்த திணைக்களத்தின் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் சமுதாயம்சார் சீர்திருத்தங்கள் திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் எம். எம். ரசுல்சா ஏற்பாட்டில் புதிய மாட்ட செயலகத்தில் (06) இன்று இடம் பெற்றது.

இத் திணைக்களத்தில் சமூகச் சீர்திருத்தம், சமூகப் பாதுகாப்பு மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை நல்வழிப்படுத்துவது தொடர்பாகவும் இதன் போது கருத்து தெரிவிக்கப்பட்டது.

சமூக அடிப்படையிலான மறுவாழ்வு திட்டங்களை வழங்குவது, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு சேவைகளை விரிவுபடுத்துவது ஆகியவை குறித்தும் ஆராயப்பட்டது.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், பிரதேச செயலாளர்கள், சிரேஸ்ட சமுதாயம்சார் சீர்திருத்த உத்தியோகத்தர் MSM.சப்றீன், சமுதாயம்சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *