கல்முனையில் கோர விபத்து: சகோதரர்களில் ஒருவர் உயிரிழப்பு!

கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில், பயாஸ் மோட்டர்ஸ் நிறுவனத்திற்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த சகோதரர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கல்முனை ஹனிபா வீதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரும் துவிச்சக்கர வண்டியில் கல்முனை சந்தைக்குச் சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *