சிறையில் உள்ள இம்ரான் கான் விடயத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கை கீழ்த்தரமானது!

கோவிட்-19 காலத்தில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலவந்தமாக எரிக்கப்பட்டபோது, அதற்கு எதிராகக் குரல் கொடுத்து இலங்கைக்கு உதவியவர் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரத்தில் அரசாங்கம் தனது கவலையை வெளிப்படுத்தத் தயங்குவது வெட்கக்கேடானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மியன்மாரில் இனப்படுகொலை மற்றும் வன்முறைகளுக்கு உள்ளான ரோஹிங்கியா அகதிகளுக்கு சர்வதேசப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், முல்லைத்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்களை ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் சந்திப்பதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே ரவூப் ஹக்கீம் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *