பேனாவுக்குள் தங்கம் வைத்து கடத்த முயன்றவர் கைது!

காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து நாகப்பட்டினம் நோக்கிப் பயணிக்கத் தயாரான ‘சுபம்’ கப்பலில் தங்கக் கடத்தல் முயற்சி ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் உடைமைகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது, பேனா வடிவில் நூதனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக் கம்பியொன்று கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

தங்கத்தை கடத்த முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் குறித்த நபரை சுங்க அதிகாரிகள் கைது செய்து, தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *