போரதீவுப்பற்றில் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின விழா – 2026!

போரதீவுப்பற்று வெல்லாவெளியில் பிரதேச செயலகமும் சமுர்த்தித் திணைக்களமும் இணைந்து உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் “திடமான உள்ளங்கள்-வளமான சிறுவர்கள்” எனும் தொனிப் பொருளில் ஏற்பாடு செய்த சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின விழா சின்னவத்தை கிராம அலுவலர் பிரிவிலுள்ள பொது மைதானத்தில் அண்மையில் (2026.10.08) பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது கலை நிகழ்வுகள், போட்டி நிகழ்வுகள் பல இடம்பெற்றதுடன் மாணவர்கள் பலருக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

மேலும், கல்வி மற்றும் ஏனைய விடயங்களில் திறமைகளை வெளிப்படுத்திய சிறார்கள் மற்றும் முதியோர்களும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கபட்டனர். அத்துடன் போட்டி நிகழ்வுகளில் வெற்றியீட்டிய சிறார்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், நிருவாக கிராம உத்தியோகத்தர், போரதீவுப்பற்று பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளீர் பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட போரதீவுப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், முதியோர்கள், சிறுவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *