பிளாஸ்டிக் போத்தலில் இருந்த டீசலை தவறுதலாக அருந்திய ஒரு வயது குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் வீட்டுக்குள் பிளாஸ்டிக் போத்தலில் சேமித்து வைக்கப்பட்டிருந்த டீசலை தவறுதலாக அருந்திய ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

வீட்டில் இருந்த பிளாஸ்டிக் போத்தலை குழந்தை தவறுதலாக எடுத்து டீசலை அருந்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து குழந்தை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், எரிபொருட்கள், மருந்துகள், இரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட ஆபத்தான பொருட்களை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத வகையில் பாதுகாப்பாக சேமித்து வைக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

குறிப்பாக, டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை பிளாஸ்டிக் போத்தல்கள் போன்ற குழந்தைகளுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய கொள்கலன்களில் வைப்பதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் சேமித்து வைப்பது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *