பேராதனை – கம்பளைக்கிடையில் கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் இன்று (02) முதல் மீண்டும் ஆரம்மாகவுள்ளன.
தித்வா புயலால் ரம்புக்கனை முதல் கம்பளை வரையிலான ரயில் பாதையில் 103 இடங்களில் சேதங்கள் ஏற்பட்டிருந்தன.இதனால், இப்பாதைகளூடான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.
தித்வா புயலுக்குப் பிறகு, ரயில் சேவைகள் பல கட்டங்களாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு வரும் நிலையில்,அம்பேவெலவிலிருந்து பதுளைக்கும், கொழும்பு கோட்டையிலிருந்து ரம்புக்கணைக்கும் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பமாகின.
தற்போது, நானுஓயாவிலிருந்து பதுளைக்கும், நாவலப்பிட்டியவிலிருந்து ஹற்றனுக்கும் ரயில் சேவைகள் வழக்கம் போல இடம்பெற்றுவருகின்றன.இந்நிலையில் பேராதனை மற்றும் கம்பளைக்கிடையேயான ரயில் சேவைகளும் இன்று (02) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.

