பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!

பிரதிசபாநாயகர் தலைமையில் இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

இன்றைய அமர்வில் முற்பகல் 9.30 முதல் 10 மணி வரை பாராளுமன்ற அலுவல்கள் இடம்பெறுவதுடன், 10 மணி முதல் 11 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களும், 11 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களும் இடம்பெறவுள்ளன.

இதனைத் தொடர்ந்து, முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை ஏழு தனியார் உறுப்பினர் பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளன.

இதன்போது, தியகம வனத்தைப் பாதுகாத்தல், புத்தளம் புகையிரதப் பாதையில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இன வன்முறைகள் தொடர்பில் உண்மையைக் கண்டறிய விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்தல் உள்ளிட்ட முக்கிய பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளன.

மேலும், வீதி ஒதுக்குப் பிரதேசங்களில் மரங்களை நடுதல் மற்றும் பராமரித்தல், கல்வியியற் கல்லூரிகளைப் பல்கலைக்கழக பீடங்களாக மாற்றுதல், நுண்நிதிக் கடன்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குதல் மற்றும் விளையாட்டு அமைப்புக்களை அரசியல் மயமாக்கலில் இருந்து விடுவித்தல் தொடர்பான பிரேரணைகளும் முன்வைக்கப்படவுள்ளன.

அத்துடன், பிற்பகல் 5 மணி முதல் 5.30 மணி வரை எதிர்க்கட்சியின் ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *