உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்வதைத் தடுக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு தொடர்பான விசாரணையை 2027ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் திகதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த மனுவை நிராகரித்ததைத் தொடர்ந்து, அதற்கு எதிராக அவர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.
குறித்த மனு இன்று (25) மஹிந்த சமயவர்தன தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, மேலதிக சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக வழக்கை 2027 மார்ச் 5ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

