இந்தியாவிற்குள் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதி ஊடாக நகரும் ஒரு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால் மழை நிலைமை தொடர்வதால், இன்று (24) இலங்கையின் தென்மேற்குப் பகுதியின் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை முன்னறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, .ன்று மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். இப்பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.இதேவேளை வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய மற்றும் அதனை அண்டிய வடமேற்குப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, தற்போது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இந்தியாவின் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனை அண்டிய தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளைக் கடந்து கொண்டிருக்கிறதுஇந்த வளிமண்டலத் தொகுதியினால் இலங்கைக்கு நேரடி தாக்கம் எதுவும் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டாலும், இத்தொகுதியை நோக்கிய காற்று வீச்சு காரணமாக தீவின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழை நிலைமை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *