மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் தொடர்ந்துள்ள நிலையிலும், இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இரண்டாவது தடவையாக குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளது.
அதன்படி, இலங்கையில் இன்று காலை 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.370,000 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.5,000 குறைந்து ரூ.365,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், இன்று காலை 22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.340,400 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.4,600 குறைந்து ரூ.335,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இதன் படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.45,625 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.41,975 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

