இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள ‘அந்தோணி’ (Anthony) திரைப்படத்தின் முதல் பாடலான ‘உன்ன எண்ணி’ (Unna Enni) இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வரன் இயக்கத்தில், தமிழ், மலையாளம் மற்றும் சிங்களம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கயல் வின்சென்ட் மற்றும் டி.ஜே. பானு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இளையராஜாவின் மெல்லிசையில் ஒரு அழகான உணர்வுப்பூர்வமான பாடலாக இது இருக்கும் என சினிமா விமர்சகர்களினால் எதிர்பார்க்கப்படுகிறது.


