ரூ.40 மில்லியன் செலவில் ஆத்துக்கட்டு பாலத்தின் அடித்தளப் பணிகள் நிறைவு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பழுகாமம் மற்றும் பெரியபோரதீவு பகுதிகளை இணைக்கும் ஆத்துக்கட்டு பாலத்தின் புனரமைப்புப் பணிகளை ஊடகவியலாளர்கள் நேரில் பார்வையிட்டனர்.

டித்வா புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சேதமடைந்த ஆத்துக்கட்டு பாலத்தின் அடித்தள நிர்மாணப் பணிகளுக்காக அரசாங்கம் 40 மில்லியன் ரூபாயை ஒதுக்கி, புனரமைப்புப் பணிகளைத் துரிதமாக முன்னெடுத்துள்ளது.

பாலத்தின் தற்காலிக அமைப்பிற்கு இந்திய அரசாங்கம் உதவியளித்த நிலையில், அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அடித்தளப் பணிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

துரித கதியில் பாலத்தின் புனரமைப்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு மீண்டும் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டதன் மூலம், வெள்ளக் காலங்களில் ஏற்படும் போக்குவரத்துத் தடைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு அப்பகுதி மக்கள் பயனடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *