எரிபொருள் கட்டணங்கள் குறித்து சி.பி.சி தலைவர் விளக்கம்!

இலங்கையில் விநியோகிக்கப்படும் எரிப்பொருளுக்கு அரசாங்கம் விதிக்கும் அரச கட்டணங்கள் மற்றும் வரிகள் தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா பாராளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.

கடந்த மூன்றாம் திகதி பாராளுமன்ற நிதிக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

ஒரு லீற்றர் பெற்றோலில் வரிகள் மற்றும் அரச கட்டணங்களாக 145 ரூபாயும் அதேபோல, ஒரு லீற்றர் டீசலில் வரிகள் மற்றும் அரச கட்டணங்களாக 128 ரூபாய் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தற்போது சந்தையில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 424 ரூபாவாக விநியோகிக்கப்படுவதுடன், ஒரு லீற்றர் டீசலின் விலை 397 ரூபாவாக விநியோகிக்கப்படுகிறது.பெற்றோல் மற்றும் டீசலுக்காக கலால் வரி, சேர்க்கப்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட வரி (VAT) மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிலுவையிலுள்ள கடன்களை செலுத்துவதற்காக அறவிடப்படும் கட்டணம் 50 ரூபா தொகையும் இதில் அடங்கும்.

இதற்கமைய, ஒரு லீற்றர் பெற்றோலில் உள்ள வரிகள் மற்றும் அரச கட்டணம் சுமார் 34 சதவீதமாகவும் ஒரு லீற்றர் டீசலில் உள்ள வரிகள் மற்றும் அரச கட்டணம் சுமார் 32 சதவீதமாகவும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *