ரூ.500 மில்லியனில் நவீன நெல் உலர்த்தும் இயந்திரங்கள்!

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கு 500 மில்லியன் ரூபாய் செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 50 நெல் உலர்த்தும் இயந்திரங்களை (Paddy Dryers) வழங்கும் திட்டத்தை வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு ஆரம்பித்துள்ளது.

இதனுடன் தொடர்புடைய கூட்டுறவு ஆணையாளர்கள் மற்றும் பயனாளிகளான கூட்டுறவுச் சங்கங்களை விழிப்புணர்ச்சியூட்டும் விசேட கருத்தரங்கு ஒன்று, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவின் தலைமையில் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தில் இன்று (6) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சின் தகவலின்படி, இந்த இயந்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு நாளைக்கு சுமார் 20 மெற்றிக்தொன் நெல்லை உலர்த்தும் திறனைக் கொண்டுள்ளன.

மிகவும் தொழிற்பாற்றலுள்ள மற்றும் நிலையான மட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் பற்றிய முறையான அறிக்கைகளைப் பெற்றுக் கொண்டதன் பின்னர், இந்த இயந்திரங்களை விநியோகிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *