தமிழ் திரையுலகின் பிரபல பாடலாசிரியரும் , நடிகருமான பிரியன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘வெகுளி’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் இஷாக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வெகுளி’ எனும் திரைப்படத்தில் பிரியன், திவ்யா சந்திரன், ‘ பொய்ஸ்’ மணிகண்டன், ஷர்மி ரவி, பூவையார் , இமான் அண்ணாச்சி, சாப்ளின் பாலு , டேனியல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வி. எஸ். நாகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜே ஷமீல் இசையமைத்திருக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தமிழ் திரை கூடம் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் நிலையில் இதன் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் சிறிய முதலீட்டு திரைப்படங்களை ஆதரிக்கும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

