சனியின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் மூலிகை!

தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிறிய வணிகர்கள் முதல் மிகப் பெரும் வியாபாரிகள் வரை தங்களுடைய தொழில் நன்றாக நடைபெற வேண்டும் இந்த தொழிலில் உதவிகரமாக திகழும் தொழிலாளர்கள் முழு மனதுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான சேவையை வழங்கிட வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆனால் இது நிரந்தரமானதல்ல என்ற யதார்த்தமான உண்மையையும் அவர்கள் உணர்ந்து இருப்பார்கள்.

ஏனெனில் பல தருணங்களில் எம்முடைய விற்பனை நிலையத்தில் பணியாற்ற போதுமான தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. இதனால் தொழில் நாளடைவில் நலிவடைந்து விடுகிறது. இத்தகைய தருணத்தில் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் உங்களுடைய தொழில் தங்கு தடை இன்றி நடைபெற வேண்டும் என்றால் பிரத்யேகமான மூலிகையை எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.

எம்முடைய நிலவியல் பகுதிகளிலோ வீதியோரமாகவோ அல்லது அடர்ந்த பகுதியிலோ கரும் பூலா எனும் பெயரினை கொண்ட தாவரங்கள் வளர்வதுண்டு. இதனை அனுபவம் மிக்க வைத்தியர்களின் உதவியுடன் துல்லியமாக அவதானித்து கண்டறிந்து அதன் இலைகளையும், கனிகளையும் பாவிக்க தொடங்கினால் தொழில் காரகனாகிய சனியின் ஆதிக்கம் மற்றும் கெடு பலன் குறைந்து தொழில் விரிவடைவதுடன் விருத்தியும் அடையும். தொழிலாளர்களுக்கான பிரச்சனை நீங்கும்.  நல்ல தகுதியுள்ள தரமான தொழிலாளர்கள் கிடைப்பார்கள். தொழிலும் செழித்தோங்கும்.

செவ்வாய் + சனி கோச்சாரத்தில் இணைந்திருக்கும் போது பற்களில் கறை படியும். இத்தகைய தருணங்களில் இந்த கரும் பூலா எனும் மூலிகைச் செடியின் வேரைக் கொண்டு பல் துலக்கினால் கறை நீங்கும்.

சனியின் பாதிப்பிற்காக நீங்கள் ஆலய பரிகாரத்தை அல்லது வாழ்வியல் பரிகாரத்தை மேற்கொண்டு இருந்தாலும்.. இந்த மூலிகை இலையினை எப்போதும் உடன் வைத்திருந்தால் சனியின் பாதிப்பு குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *