வெற்றிமாறனின் ‘ சைலப்பன் சைக்கிள் மார்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

தயாரிப்பாளர் – நடிகர் இசக்கி கார்வண்ணன் மைய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘சைலப்பன் சைக்கிள் மார்ட்’ என பெயரிடப்பட்டு , அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் சினிமாவின் சர்வதேச அடையாளமாக திகழும் இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டிருக்கிறார்.

எழுத்தாளர் -கவிஞர் -இயக்குநர் – சுகா இயக்கத்தில் உருவாகி வரும் ‘சைலப்பன் சைக்கிள் மார்ட்’ எனும் திரைப்படத்தில் இசக்கி கார்வண்ணன், எம். எஸ். பாஸ்கர், இளவரசு, மூணார் ரமேஷ், பூஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மார்ட்டின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்திருக்கிறார். எளிய மக்களின் போக்குவரத்து சாதனமான மிதிவண்டியை பழுது நீக்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளியின் வாழ்வியலை யதார்த்தமாக விவரிக்கும் இந்த திரைப்படத்தை லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சைக்கிள் சக்கரத்தின் ஊடாக உலகத்தை வித்தியாசமாக காட்சிப்படுத்தி இருப்பது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *