நபரொருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், பிரபல நடிகர் ஹேமால் ரணசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 8ஆம் திகதி ஹவ்லொக் சிட்டி (Havelock City) பகுதியில் வைத்து, சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

