கினிகத்தேன பகுதியில் பாரிய லொறி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (25) புதன்கிழமை அதிகாலை பாரிய லொறி ஒன்று சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குருணாகல் பகுதியிலிருந்து அட்டன் நோக்கிப் பயணித்த குறித்த லொறி, அதிகாலை சுமார் 2.00 மணியளவில் கினிகத்தேன, கடவல பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *