மட்டக்களப்பு சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை திருநாள் உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகளும் நடத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து ஆலய வளாகம் முழுவதும் தீபங்கள் ஏற்றப்பட்டு, தீப ஒளியில் ஆலயம் ஆன்மீகப் பொலிவுடன் காட்சியளித்தது.
திருக்கார்த்திகை திருநாளின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற இவ்வழிபாட்டு நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு, பக்தியுடன் தீபமேற்றி முருகப்பெருமானை வழிபட்டனர்.
மேலும், ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் பங்கேற்ற பக்தர்கள் இறையருள் வேண்டி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

