மட்டக்களப்பு ஓட்டமாவடி 208B/2 வட்டாரத்திற்குட்பட்ட டாக்டர் பதியுதீன் குறுக்கு வீதியைச் செப்பனிடும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.எம். ஹலால்தீனின் பணிப்புரைக்கமைய, மக்களின் நீண்டகால தேவையை நிறைவேற்றும் வகையில் இப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பிரதேச சபையின் ஒவ்வொரு வட்டாரத்தினதும் அபிவிருத்திப் பணிகளுக்காக தலா 5 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், முன்னுரிமைத் தேவைகளுக்கு ஏற்ப அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்போது பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ஐ. மாஜிதா, எம். அலி அன்சார், மௌலவி ஏ.எல். லெத்திப் மற்றும் சமூக செயற்பாட்டாளர் எம்.ஏ.சி.எம். நியாஸ் ஆகியோர் கலந்துகொண்டு பணிகளைப் பார்வையிட்டனர்.

