மட்டக்களப்பு கிரானில் ஈழத் தமிழர் முன்னணி கட்சியின் ஓராண்டு நிறைவு விழா!

மட்டக்களப்பு கிரானில் ஈழத் தமிழர் முன்னணி கட்சியின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு, கட்சி நிர்வாகிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் செயலாளர் புவனதாஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சித் தலைவர் ஜெயாசரவணா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது புதிய நிர்வாகிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டதுடன், கேக் வெட்டி கட்சியின் ஓராண்டு நிறைவும் கொண்டாடப்பட்டது. மேலும், கட்சியின் புதிய நிர்வாகக் குழுவினரும் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *