காணிகளை விடுவிக்கக் கோரி மயிலிட்டி மக்கள் தொடர் போராட்டம்!

தமது பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி மயிலிட்டி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று  24 ஆவது வாரமாகவும் போராட்டத்தை நடைபெற்றது.

பல ஆண்டுகளாக தமது காணிகளை இழந்து, அவற்றை மீளப் பெற்றுக்கொள்வதற்காக தொடர்ச்சியாக போராடி வரும் நிலையில், தற்போதைய அரசாங்கமும் தமது எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறி வருவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதேநேரம் கடந்த ஆட்சிக் காலங்களிலேயே விடுவிக்கப்பட்ட காணிகளை மீண்டும் பெருமளவில் விடுவிப்பதாக அரசாங்கம் கூறி வருவதாகவும், ஆனால் இதுவரை புதிதாக குறிப்பிடத்தக்க அளவிலான காணி எதுவும் விடுவிக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த மாதத்திலும் தமது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காமல் ஏமாற்றம்தான் மிஞ்சுமா என்ற கேள்வியையும் மயிலிட்டி மக்கள் எழுப்பியுள்ளனர்.

தமது பூர்வீக நிலங்களை மீட்பதற்கான போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், இன்னும் ஓரிரு வாரங்களில் மயிலிட்டி மக்கள் ஒன்றிணைந்து பாரிய அளவிலான போராட்டமொன்றை முன்னெடுக்கத் தயாராகி வருவதாகவும் தெரிவித்தனர்.

இதேநேரம் தமது காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என மக்கள் உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *