தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், அச்சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்குமாறு வலியுறுத்தியும் நேற்று முன்தினம் முதல் நல்லூரில் தீயாக தீபம் தொடர் போராட்டமொன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
குறித்த போராட்டம் இன்று மாலை பேரணியாக சென்று ஐ.நா யாழ்.அலுவகத்திற்கு சென்று மகஜர் கையளிக்கப்பட்டு நிறைவடைய இருக்கின்றது.
இதேவேளை நல்லூரில் தியாக தீபத்தின் நினைவிடத்தில் பாடசாலை மாணவர்கள் இன்று (02) அஞ்சலி செலுத்தினர்.

