இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானார் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார!

முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாற்றுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளார்.

கடந்த அரசாங்கக் காலத்தில் இஸ்ரேலுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பரிமாற்றங்களை முறையற்ற விதத்தில், தமது ஆதரவாளர்களுக்குப் பெற்றுக்கொடுத்தமை மற்றும் அது தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளுக்காகவே அவர் தற்போது ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளதாகத் தகவலள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தீவிரப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *