அனோஜனின் விடுதலைக்காக சர்வதேச தூதரகங்களை நாடியது தமிழரசுக்கட்சி!

சவூதி மரண தண்டனை கைதி அனோஜனை மீட்க இராஜதந்திர முயற்சி: இந்திய, அமெரிக்கத் தூதுவர்களுடன் தமிழரசுக்கட்சி எம்.பி.க்கள் தீவிர பேச்சுவார்த்தை!

கொழும்பு: சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கை இளைஞனான சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றி அவரை விடுவிப்பதற்காக, இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) அவசர இராஜதந்திர நடவடிக்கைகளை முடக்கிவிட்டுள்ளது.

முக்கிய நடவடிக்கைகள்:

  • தூதரக சந்திப்புகள்: தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தலைமையிலான குழுவினர், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல்/பொருளாதார ஆலோசகர் Anthony V. Pinot ஆகியோரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  • உயிரைக் காக்கும் முயற்சி: சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனின் விடுதலைக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய அவசர இராஜதந்திர முயற்சிகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இச்சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.

  • அரசாங்கத்துடன் தொடர்பாடல்: தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அவர்களிடம் தொலைபேசி வாயிலாகவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு, அரசு மட்டத்திலான சட்ட உதவிகளை விரைவுபடுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *