பால் மாவு இறக்குமதி விலை உயர்வு: சந்தையில் புதிய மாற்றம்!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையில் புதிய மாற்றம் ஏற்படவுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் நுகர்வோருக்கு மேலும் விலை அழுத்தம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

அதன்படி, புதிய கையிருப்புகள் சந்தைக்கு வரும்போது 400 கிராம் பால் மா பக்கெட்டின் விலை ரூ.50 அதிகரிக்கப்படவுள்ளது. அதேபோல், ஒரு கிலோகிராம் பால் மா பக்கெட்டின் விலை ரூ.125 வரை உயர்வடையவுள்ளது.

உலக சந்தை மாற்றங்கள் மற்றும் இறக்குமதி செலவுகள் அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு காரணமாக குறிப்பிடப்படுகிறது. இதன் தாக்கம் விரைவில் சந்தையில் தெளிவாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *