கிளிநொச்சி மாவட்டத்தின் வீடமைப்பு அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்டத்தின் வீடமைப்பு அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்டத்தில் இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வீடமைப்பு திட்டங்கள்,வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வீடமைப்பு திட்டங்கள், 2018 காலப்பகுதியில் வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீடமைப்பு திட்டங்களின் நிலை உள்ளிட்ட வீடமைப்பு தொடர்பான பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

குறித்த கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள்,மாவட்ட வீடமைப்பு அதிகார சபை முகாமையாளர் கருணாதிலக, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், வீடமைப்பு அதிகார சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *