அனோஜனுக்காக போராட்டம் : கந்தையா பாஸ்கரன் விடுத்துள்ள கோரிக்கை

தமிழ் – முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுதலை செய்யத் தேவையான உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாக ஐபிசி தமிழ் ஊடக குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் நேற்று (20) மாலை நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அனோஜனுடைய உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நம்பிக்கையை முதலில் ஏற்படுத்த வேண்டும். உயிரைக் காப்பாற்ற வேண்டுமானால் அதற்காக வேகமாக ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும்.

அந்த அடிப்படையில் அதை எப்படிக் கையாள்வது என்பது தொடர்பில் தமிழர்களாக ஒரு கட்டமைப்பை உருவாக்கி பல முனைகளிலும் வேலை செய்ய வேண்டியுள்ளது.

இதற்காக ஆங்காங்கே சில்லறை சில்லறையாக நிறைய விடயங்கள் நடைபெறுகின்ற நிலையில் இவை யாவற்றையும் ஒருங்கிணைத்து வேலைகளைப் பிரித்தெடுத்து வேலைத்திட்டத்தை வரையறை செய்து விரைந்து செயற்பட்டால் நிச்சயமாக அனோஜனுடைய உயிரைக் காப்பாற்ற முடியும்.”என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *